• Tue. Dec 9th, 2025

24×7 Live News

Apdin News

மார்பகங்கள் இந்த பெண்ணின் வாழ்க்கையில் பெரும் சுமையாக மாறியது எப்படி?

Byadmin

Dec 9, 2025


மெலிசா ஆஷ்கிராஃப்ட், ஸ்காட்லாந்து, மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Melissa Ashcroft

படக்குறிப்பு, மெலிசா ஆஷ்கிராஃப்ட், தனது 36M அளவு மார்பகங்கள் சுமார் இரண்டரை ஸ்டோன் (16 கிலோ) எடை கொண்டிருப்பதாகக் கூறினார்.

    • எழுதியவர், கிளேர் தாம்சன்
    • பதவி, பிபிசி ஸ்காட்லாந்து

தனது மார்பகங்களின் அளவு காரணமாகப் பல ஆண்டுகளாக நாள்பட்ட வலியுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண், தேசிய சுகாதார சேவையில் (NHS) மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை பெறுவது முன்னெப்போதையும் விட அணுக முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

மெலிசா ஆஷ்கிராஃப்ட், தனது 36எம் அளவு மார்பகங்கள் தனது வாழ்க்கையின் சில பகுதிகளைச் சிரமமானதாகவும், வேதனையளிப்பதாகவும், வலியுடனும் ஆக்கியுள்ளன என தெரிவித்தார். சில சமயங்களில் புதிதாக பிறந்த தனது மகளை கட்டிலில் இருந்து அவரால் தூக்க முடியவில்லை.

30 வயதான, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவரிடம், அவரது உடல் நிறை குறியீட்டெண் (BMI) சுமார் 35-ஆக இருப்பது, குறைப்பு அறுவை சிகிச்சைக்கான தேசிய சுகாதார சேவை பெறும் தகுதிக்கான அளவை விட அதிகமாக உள்ளது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பிளேயர்கோவ்ரியில் வசிக்கும் மெலிசா, தனது மார்பகங்களே சுமார் இரண்டரை ஸ்டோன் (16 கிலோ) எடையை கூட்டுவதால் தனது எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில் சிரமமாக இருப்பதாக கூறுகிறார்.

மெலிசா ஆஷ்கிராஃப்ட், ஸ்காட்லாந்து, மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Melissa Ashcroft

படக்குறிப்பு, தேசிய சுகாதார சேவையில் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை பெறுவதற்குத் தகுதியடைய எடையை குறைக்க வேண்டும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

“எனது தோள்களிலும் கீழ் முதுகிலும் வலி இருப்பதால் நான் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கிறது,” என்று அவர் பிபிசி ரேடியோ ஸ்காட்லாந்தின் மார்னிங்ஸ் நிகழ்ச்சியில் கூறினார்.

By admin