• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

மாலத்தீவு: அதிபர் முய்சு இந்தியா வருவது உதவி கேட்கவா? அவரது எதிர்பார்ப்புகள் என்ன?

Byadmin

Oct 6, 2024


மாலத்தீவு: அதிபர் முய்சு இந்தியா வருவது உதவி கேட்கவா? அவரது எதிர்பார்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா எனும் அச்சத்துடன், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் முகமது முய்சு இந்தியாவிடம் உதவி கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மாலத்தீவில் ஏற்பட்ட தேர்தலின்போது, ‘இந்தியாவே வெளியேறு’ என்ற கொள்கையை மையப்படுத்தி முய்சு பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைப்பதாக உறுதியளித்து தேர்தலில் வெற்றி பெற்ற முய்சு, இருநாட்டு உறவை மேம்படுத்தும் நோக்குடன் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை.

முகமது முய்சு அதிபரான பிறகு, இருநாட்டு உறவுகளும் மோசமடைந்து வந்தன. இந்நிலையில், மாலத்தீவு தனது பெரிய அண்டை நாட்டைப் புறக்கணிக்காது என்பதை அவரது வருகை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவின் அந்நிய செலாவணி கையிருப்பு 440 மில்லியன் டாலர்கள் என்றிருந்தது. அதன்மூலம் ஒன்றரை மாதங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

By admin