• Tue. Nov 26th, 2024

24×7 Live News

Apdin News

மாவீரர்களை நினைவேந்த எந்தவித தடையும் இல்லை! – அநுர அரசு அறிவிப்பு

Byadmin

Nov 26, 2024


“தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.”- இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய அரசின் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,

“மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்களை ஒளிப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது.” – என்றார்.

 

By admin