• Sun. Feb 2nd, 2025

24×7 Live News

Apdin News

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Byadmin

Feb 2, 2025


தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி இறுதி வரைக்கும் ஓயாது குரல் கொடுத்த பெருந்தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் தீயுடன் சங்கமானது.

யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தலைமையில் அஞ்சலி உரைகள் ஆரம்பமாகின.

அஞ்சலி உரைகள் நிறைவுற்ற பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் அன்னாரின் புகழுடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மாவை சேனாதிராஜாவின் புகழுடன் தீயுடன் சங்கமானது.

இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாவை சேனாதிராஜாவுக்குத் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர்.

1942ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை.சோ. சேனாதிராஜா வீட்டில் தவறி வீழ்ந்த நிலையில் – யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் – சிகிச்சைகள் பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார்.

The post மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்! appeared first on Vanakkam London.

By admin