• Sun. Dec 29th, 2024

24×7 Live News

Apdin News

மாவை பெரும் தலைவர்; சி.வி.கே. பதில் தலைவர்! – தமிழரசின் மத்திய குழு தீர்மானம்

Byadmin

Dec 28, 2024


“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தாலும் கூட முதலாவதாக தலைவர் விடயம் குறித்து பேசப்பட்டது. இதன்போது அடுத்த மாநாடு கூடுகின்ற வரைக்கும் இருக்கின்ற இடைக்காலத்தில் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் பணியாற்றுவார் எனவும், மாவை சேனாதிராஜா அரசியல் குழுத் தலைவராகச் செயற்பாடுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது மாவை சேனாதிராஜா ஒரு பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் சொல்லப்பட்டது.

அரசியல் யாப்புக்களுக்கு அப்பாற்பட்ட பதவிகளில் இருப்பது அர்த்தமில்லை எனவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் மேற்படி  தீர்மானம் எடுக்கப்பட்டது.” – என்றார்.

By admin