• Mon. Sep 1st, 2025

24×7 Live News

Apdin News

மிகப்பெரிய எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு: சீனா உலகுக்கு சொல்ல வரும் செய்தி என்ன?

Byadmin

Aug 31, 2025


தியான்ஜின் நகரில் மாநாடு நடைபெறும் அரங்கு

பட மூலாதாரம், Getty Images

நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும்.

சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை சீனா நடத்துகிறது.

23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது எஸ்சிஓவின் வரலாற்றில் ‘இதுவரை இல்லாத மிகப்பெரிய’ உச்சி மாநாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஓ உச்சி மாநாட்டை சீனா நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். சீனா கடைசியாக 2018 ஜூன் மாதம் கிங்தாவில் இந்த நிகழ்வை நடத்தியது.

By admin