• Tue. Oct 28th, 2025

24×7 Live News

Apdin News

“மிதிகம லசா” படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்!

Byadmin

Oct 28, 2025


“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத்  என்பவர் ஒக்டோபர் 22 ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி இன்று திங்கட்கிழமை (27) பிற்பகல் கொழும்பு நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதான துப்பாக்கிதாரி மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைதுசெய்யப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதான துப்பாக்கிதாரி இன்று கொழும்பு நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin