• Sun. Apr 27th, 2025

24×7 Live News

Apdin News

மின்சாரம் தாக்கி வயோதிபர் பரிதாப மரணம்!

Byadmin

Apr 27, 2025


நுவரெலியா, கந்தப்பளையில் மரக்கறித் தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கந்தப்பளை, புதிய வீதி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே மேற்படி வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

அவர் வழமை போன்று தனது வீட்டில் இருந்து தோட்டத்துக்குச் சென்றுள்ளார்.

தோட்டத்துக்குச் சென்ற வயோதிபர் மீண்டும் வராததால் அவரது உறவினர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தோட்டத்தில் வயோதிபர் சடலமாகக் கிடப்பதை அவதானித்த உறவினர்கள், இது தொடர்பில் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்துக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் சடலமானது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தப்பளை பொலிஸாரரும், நுவரெலியா தடயவியல் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

The post மின்சாரம் தாக்கி வயோதிபர் பரிதாப மரணம்! appeared first on Vanakkam London.

By admin