• Tue. Mar 4th, 2025

24×7 Live News

Apdin News

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! | சீரற்ற வானிலையால் 726 பேர் பாதிப்பு!

Byadmin

Mar 4, 2025


தற்போது சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததோடு, பலத்த மழை, கடும் காற்று, மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரியில்  பெய்துவரும் கடும் மழை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் 177 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இந்நிலையம் தெரிவித்துள்ளது.

By admin