• Sat. Nov 30th, 2024

24×7 Live News

Apdin News

மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: வாரியத் தலைவருக்கு சிஐடியு கடிதம் | Negotiation of pay hike for electrical employees

Byadmin

Nov 30, 2024


சென்னை: மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பபின் (சிஐடியு) பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மின்வாரியத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும். மின்வாரிய நிர்வாகம் அதற்கான பேச்சுவார்த்தை குழுவை இன்னும் அமைக்கவில்லை. இதற்கு முந்தைய பேச்சுவார்த்தையிலும் படித்தொகை உயர்த்தப்படவில்லை.

ஏறத்தாழ 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கூடுதல் பணிச்சுமையோடு அனைவரும் பணியாற்றி வருகிறோம். எனவே, அனைத்து பணியாளர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயர்த்தி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

உரிய முறையில் சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும். ஆரம்ப கட்ட பதவிகளான கள உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நிறைவுபெற்று ஒப்பந்தம் இறுதி செய்ய்பபடும் வரை இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin