0
தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு பாலத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யும் திட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் அறிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க பாலத்தையும் அதன் சுற்றுப்புறங்களை ஒளிரச் செய்வதற்காக கட்டப்பட்ட மின்மாற்றிக்கு, மின்சாரம் வழங்க தேவையான மின்சார கேபிள்களை இடுவதற்கு தனியார் நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த தாமதம் ஏற்பட்டதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் ஜெனரல் நிலங்குரே தெரிவித்துள்ளார்.
தேவையான கேபிள்களைப் பெறுவதற்கான மாற்றுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது தொழில்நுட்ப ரீதியாக சவாலான பணியாகவே உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் முடிக்க திட்டமிடப்பட்ட குறித்த திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய கலாச்சார நிதியமும் ரயில் திணைக்களமும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக ஆரம்பிக்க தயாராகி வருவதாகவும் மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் ஜெனரல் நிலங்குரே தெரிவித்துள்ளார்.