மியன்மார் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதில் மியன்மாரின் மண்டலே நகரத்திற்கு வெளியே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
பொதுமக்களில் 16 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் டாங் யின் கிராமத்துக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல் 2 மணி நேரம் வரை நீடித்தது.
இராணுவத்துக்கும் ஆட்சிக் கவிழ்ப்பு எதிர்ப்புக் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்தது வருகிறது.
அதில் அந்த வழியாகச் சென்ற லொரிகள் சிக்கின. அந்த வட்டாரத்தில் இருந்த பல வாகனங்களும் கட்டடங்களும் சேதமுற்றன.
மியன்மாரில் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
The post மியன்மார் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்; 16 பொதுமக்கள் உயிரிழப்பு! appeared first on Vanakkam London.