2
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை உலுக்கியது.
பாங்காக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பீதியுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், அங்கிருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் அங்கு இடிந்து விழுந்த பாலங்கள் மற்றும் கட்டிடங்களைக் காட்டுகின்றன.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு (6:20 GMT) முன்னதாக மத்திய மியான்மரில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சீனா மற்றும் இந்தியா வரை கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் குலுங்கியுள்ளன.