சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டடங்கள் – மியான்மர் நில நடுக்கத்தின் காட்சிகள்
மியான்மரில் கோரமான நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி வருகின்றன. மேண்டுலே நகரில் பல அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்து விழும் காட்சி இது. சாலையில் நின்ற புத்த துறவிகள் அதிர்ச்சியில் பதறிய நிலையிலும், இதனை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். 7.7 அளவில் வெள்ளிக்கிழமை தாக்கிய நிலநடுக்கத்தில் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தாய்லாந்தின் பேங்காக்கும் பாதிக்கப்பட்டது. மியான்மருக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி உள்ளது.