• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

மியான்மர் மற்றும் சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Byadmin

Jan 3, 2025


மியான்மர் மற்றும் சிலி நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று காலை 10.02 மணியளவில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

127 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, மியான்மரில் கடந்த மாதம் 14ஆம் திகதி 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிலி நாட்டின் பொலிவியா எல்லைப் பகுதியில் இன்று காலை 2.13 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

75 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த மாதம் 14ஆம் திகதி சிலி நாட்டின் அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin