• Sun. May 25th, 2025

24×7 Live News

Apdin News

மிஸ் வேர்ல்டு சர்ச்சை: ஹைதராபாத்தில் “விபச்சாரியாக உணர வைக்கப்பட்டேன்” என இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு

Byadmin

May 25, 2025


மிஸ் இங்கிலாந்து 2025 அழகி மில்லா மேகி

பட மூலாதாரம், missworld.com

படக்குறிப்பு, ‘மிஸ் இங்கிலாந்து 2025’ அழகி மில்லா மேகி, கொடுத்த ஒரு பேட்டியில் அழகிப் போட்டிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை சர்ச்சை சூழ்ந்துள்ளது. தெலங்கானாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகிய ‘மிஸ் இங்கிலாந்து 2025’ அழகி மில்லா மேகி, கொடுத்த ஒரு பேட்டியில் அழகிப் போட்டிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

“அவர்கள், நான் ஒரு விபச்சாரி என்று நினைக்க வைத்தார்கள்” என மில்லா மேகி “தி சன்” என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது தெலங்கானா மாநில அரசியலில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.

72வது உலக அழகி போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. மே 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு ஏற்பாடு செய்த பிரமாண்டமான தொடக்க விழா மே 10ஆம் நாளன்று கச்சிபெளலி மைதானத்தில் நடைபெற்றது.

மிஸ் இங்கிலாந்து வெற்றியாளர் மில்லா மேகி, மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக ஹைதராபாத் வந்தவர்களில் ஒருவர். போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மே 7ஆம் தேதியன்று ஹைதராபாத் வந்த அவர், மே 16ஆம் தேதி நாடு திரும்பினார்.

By admin