0
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, எதிர்வரும் திங்கட்கிழமை (18) அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.
அலாஸ்காவில் இன்று (16) ரஷ்ய – அமெரிக்க அதிபர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முக்கியத் தகவல்களை டிரம்ப், உக்ரேன் ஜனாதிபதியிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.
அத்துடன், உக்ரேன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க அமெரிக்கா செல்வதாக ஸெலென்ஸ்கி கூறினார்.
அமெரிக்க – உக்ரேன் – ரஷ்ய ஜனாதிபதிகளின் முத்தரப்புச் சந்திப்புக்குத் தயாராயிருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். ஆனால், ரஷ்யா தயங்குகிறது.
முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கத் தலைவர்களின் முத்தரப்புச் சந்திப்பு வழியமைக்கும் என ஸெலென்ஸ்கி கூறுகிறார்.
ரஷ்ய – அமெரிக்க ஜனாதிபதிகளின் சந்திப்பில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்கிறது.