• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | cm Stalin pens letter to union government to release fishermen

Byadmin

Jan 10, 2025


சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடிதத்தில், ‘காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் கடந்த ஜன.8ம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளனர். அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளது.

எனவே, உரிய தூதரக வழிமுறைகளை முன்னெடுத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.



By admin