• Tue. Apr 21st, 2026

24×7 Live News

Apdin News

‘மீன்களை கையில் ஏந்தியபடி பிரசாரம்’ – மேற்கு வங்க தேர்தலில் மீன் முக்கிய இடம் பெற்றது ஏன்?

Byadmin

Apr 21, 2026


 மீனை அடையாளச் சின்னமாக வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.
படக்குறிப்பு, கொல்கத்தாவில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீனை அடையாளச் சின்னமாக வைத்து பிரசாரம் செய்கின்றனர்.

கொல்கத்தாவில் ஒரு காலைப் பொழுதில் கௌஸ்தவ் பாக்சி கையில் மீனுடன் வீடு வீடாகச் செல்கிறார்.

அவருக்குப் பின்னால் மேளங்கள் அதிர, ஆதரவாளர்கள் அவரது பெயரை முழங்குகின்றனர். வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாக்சி, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பாரக்பூர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

வாக்காளர்களைக் கவரும் ஒரு கருவியாக அவர் இந்த மீனைப் பயன்படுத்துகிறார். கொள்கைகளைப் பற்றிய உரைகள் எதுவும் அங்கு இல்லை. “நான் உங்களில் ஒருவன்” என்பதை உணர்த்தும் ஒரு காட்சி அடையாளம் மட்டுமே அங்கு உள்ளது.

சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தாவின் துறைமுகப் பகுதியில், மற்றொரு பாஜக வேட்பாளரான ராகேஷ் சிங் இதே போன்ற ஒரு காட்சியினை அரங்கேற்றுகிறார்.

கட்சித் தொண்டர்கள் புடைசூழ வரும் அவர், அதிகாலைக் கூட்டத்தின் வழியே செல்லும்போது மீனை உயர்த்திப் பிடிக்கிறார். கொல்கத்தா மேயர் பிர்ஹாத் ஹக்கீமை அவர் எதிர்கொள்கிறார்.

By admin