• Mon. May 5th, 2025

24×7 Live News

Apdin News

முகலாயர்களின் ஆட்சி இருண்டகாலமா? – பாடப் பகுதிகள் நீக்கம் குறித்து அரசு கூறுவது என்ன?

Byadmin

May 5, 2025


என்.சி.இ.ஆர்.டி, முகலாயர், சோழர், பாண்டியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகலாயப் பேரரசைத் தவிர, டெல்லி சுல்தானகம் பற்றிய அத்தியாயமும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் – NCERT ) வெளியிட்ட 7 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தானியம் பற்றிய எந்தக் குறிப்பும் அளிக்கப்படவில்லை.

இதுவரை இந்தப் புத்தகத்தில் முகலாயப் பேரரசு மற்றும் டெல்லி சுல்தானகம் குறித்து சுருக்கமான பாடங்கள் இருந்தன.

ஆனால் 2025-26 ஆண்டுக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்திலிருந்து இந்தப் பாடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது.

By admin