• Wed. Oct 30th, 2024

24×7 Live News

Apdin News

முகலாயர் வரலாறு: அரியணைக்காக மகன் ஜஹாங்கீர் கிளர்ச்சி செய்தபோது அக்பர் என்ன செய்தார்?

Byadmin

Oct 30, 2024


அக்பரின் இறுதி காலம் எப்படி இருந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்பரின் உருவப்படம்

அக்பரின் கடைசி நாட்கள், அவருக்கு நெருக்கமான பலருடைய மரணத்தின் துக்கத்தில் கழிந்தது. அந்த நேரத்தில் அவரது தாயார் ஹமிதா பானோ பேகம் மற்றும் இரண்டு மகன்கள் காலமானது மட்டுமின்றி அவரது மூத்த மகன் சலீம் அவருக்கு எதிராகக் கிளர்ச்சியும் செய்தார்.

தனது நவரத்தினங்களில் ஒருவரான பீர்பால் பழங்குடியினரால் கொல்லப்பட்டபோது அக்பர் இரண்டு நாட்கள் வரை உணவையோ தண்ணீரையோ தொடவில்லை. தனது தாயின் வற்புறுத்தலின் பேரில் அவர் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்.

“அக்பரின் இரு மகன்கள் முராத் மற்றும் தானியால், அதீத மது பழக்கம் காரணமாக மிக இளம் வயதிலேயே உயிரிழந்தனர். அவரது மூன்றாவது மகன் சலீமும் குடிப் பழக்கம் உள்ளவர். அவர் அக்பருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது மட்டுமல்லாமல் அவரது நெருங்கிய ஆலோசகரான அபுல் ஃபசலையும் கொல்ல வைத்தார்.”

“ஒரு தந்தையாகத் தான் தோல்வியடைந்தது அக்பரின் மிகப்பெரிய துக்கமாக இருந்தது,” என்று எம்.எம்.பர்க், அக்பரின் வாழ்க்கை வரலாறான ‘அக்பர் தி கிரேட் முகல்’ புத்தகத்தில் எழுதுகிறார்.

By admin