• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

முகுல் சௌத்ரி: லக்னௌவுக்கு தனி ஒருவனாக வெற்றி தேடித் தந்த 21 வயது இளம் வீரர் யார்?

Byadmin

Apr 10, 2026


LSG vs KKR, முகுல் சௌத்ரி, ஐபிஎல்

பட மூலாதாரம், Reuters

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை.

மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ரிஷப் பன்ட் என முன்னணி வீரர்கள் அனைவரும் அவுட்டாகி பெவிலியனில் அமர்ந்திருந்தார்கள். கைவசம் இருந்ததோ 3 விக்கெட்டுகள் மட்டுமே.

எஞ்சியிருந்தது, தன் மூன்றாவது ஐபிஎல் போட்டியில் ஆடும் முகுல் சௌத்ரியும் பின் வரிசையில் எஞ்சியிருந்த பௌலர்களும் மட்டுமே.

இப்படியொரு நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் தங்களின் முதல் வெற்றியைப் பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது.

ஆனால், எதிர்பாராத ஒன்றை அரங்கேற்றிக்காட்டினார் முகுல் சௌத்ரி. 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து தனி ஆளாக லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு வெற்றி தேடித் தந்தார் அந்த 21 வயது ராஜஸ்தான் இளைஞர்.

By admin