2
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், முக்கியப் பதவிகளுக்கான தலைவர்களை அறிவித்து வருகிறார்.
அதன்படி, புதிய அரசாங்கச் செயல்துறை அமைச்சை வழிநடத்த Tesla, SpaceX மற்றும் X நிறுவனங்களின் உரிமையாளர் எலோன் மஸ்கைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் புதிய தற்காப்பு அமைச்சராக அமெரிக்க இராணுவத்தில் முன்னர் சேவையாற்றியுள்ள Fox தொலைக்காட்சிப் படைப்பாளர் பீட் ஹெக்செத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மைக்கல் வால்ட்ஸ், மத்தியக் கிழக்குத் தூதராக பங்கச் சந்தைத் தொழிலதிபர் ஸ்டீவ் விட்கொஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதிதாக அமைக்கப்படும் அரசாங்கச் செயல்திறன் அமைச்சுக்கு எலோன் மஸ்க்கிற்கு மேலதிகமாக, குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசுவாமியும் அமைச்சை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவேக் ராமசுவாமி மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
78 வயதுடைய டிரம்ப், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
அரசாங்கத்துறை சீரமைக்கப்படும், கூடுதலான விதிமுறைகள் அகற்றப்படும் மற்றும் வீண்செலவு குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சின் பணி, 2026ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி முடிவுறும். அமெரிக்காவுக்குச் சுதந்திரம் கிடைத்த 250 ஆண்டு நிறைவின்போது சிறிய, திறமையான அரசாங்கம் அமைப்பது நாட்டுக்குக் கிடைக்கும் பரிசு என்றும் டிரம்ப் கூறினார்.