7
குரல் கேட்டதுண்டு.
மனம் திறந்து நான்
பேசியதும் உண்டு.
ஆரத் தழுவியது முண்டு.
நெடு நாளாய் நானும்
உன்னை காணும்
கனவோடு இருந்தேன்.
நாட்கள் ஓடி மறைந்தன.
மாலைச் சூரியன்
வானில் இல்லைப் போல்.
மேகமூட்டம் அதிகமாய்
இருந்த அந்த மாலை.
முச்சந்தி கடந்த
வீதியின் பயணத்தில்
கண்டேன் உன்னை நான்.
மகிழ்ந்து கொண்டேன்.
நெஞ்சம் ஒருமுறை
கனத்துப் போனது.
உடல் ஒரேயடியாக
சில நொடிகள் குளிர்ந்தது.
ஒரு கணப் பொழுதென
எண்ணிக் கொள்ளும்படி
சிலநொடிப் பயணம்
மாயமாய் மறைந்து போனது.
மெல்லிய புன்னகை.
மங்கிய மாலைப் பொழுதில்
மின்னிய நச்சத்திரமாய்
இருந்தது எனக்கது.
பலநாள் ஏக்கத்துக்கு
ஒருநாள் தீனிபோல
உன் சந்திப்பு இருந்தது.
மனதாறிய மகிழ்ச்சி.
மனதில் படரும் தனிமை
சோகம் கௌவிய கோரம்
அந்த நேரமெல்லாம் உன்
நினைவுகள் தாலாட்டுகிறது.
உன்னோடு பேசும் பொழுதில்
எனக்காக சொல்லும்
சில சொற்களால் ஆகிறேன்
இப்போதெல்லாம் உயிர்ப்பு.
நதுநசி