• Wed. Feb 11th, 2026

24×7 Live News

Apdin News

முட்டைக்கோஸ் பொரியல்

Byadmin

Feb 11, 2026


உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் செய்தால் குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ விரும்பி சாப்பிட மாட்டார்களா? ஆனால் ஹோட்டல்களில் வழங்கப்படும் முட்டைக்கோஸ் பொரியலை ஆர்வமாக சாப்பிடுகிறார்களா? அப்படியானால் சமையல் முறையில் சிறிய மாற்றம் செய்தால் போதும். வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சுவையான முட்டைக்கோஸ் பொரியல் செய்யலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் இந்த பொரியலை செய்வது மிகவும் எளிதானது. அதிக பொருட்கள் தேவையில்லை. குறிப்பாக தேங்காயுடன் ஒரு சிறப்பு கலவையை சேர்த்து அரைத்தால், பொரியலுக்கு அருமையான மணமும் சுவையும் கிடைக்கும். இந்த முறையில் செய்யப்படும் முட்டைக்கோஸ் பொரியல் சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம் போன்றவற்றுடன் மிகவும் ருசியாக இருக்கும்.

முதலில் முட்டைக்கோஸை நன்றாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அதில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து கிளற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிட வேண்டும்.

இதற்கிடையில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். முட்டைக்கோஸ் நன்றாக வெந்த பிறகு அரைத்த கலவையை சேர்த்து சில நிமிடங்கள் கிளற வேண்டும். இறுதியாக சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்தால் ஹோட்டல் ஸ்டைல் மணம் கிடைக்கும்.

இந்த முறையில் தயாரிக்கப்படும் முட்டைக்கோஸ் பொரியல் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த ரெசிபியை செய்து பார்த்து, உங்கள் குடும்பத்தினருக்கு பரிமாறி மகிழலாம்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு

முட்டைக்கோஸ் – 1/4 கிலோ

பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன் (10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்)

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

அரைப்பதற்கு..

தேங்காய் – 1/4 கப்

சீரகம் – 2 சிட்டிகை

செய்முறை:

முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு இட்லி தட்டில் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி, 4 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அரைத்த தேங்காயை பொரியலுடன் சேர்த்து, அதோடு கொத்தமல்லியையும் தூவி நன்கு 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் முட்டைக்கோஸ் பொரியல் தயார்.

The post முட்டைக்கோஸ் பொரியல் appeared first on Vanakkam London.

By admin