• Sat. May 16th, 2026

24×7 Live News

Apdin News

முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு – யாருக்கு எந்த துறை?

Byadmin

May 16, 2026


விஜய்

பட மூலாதாரம், CMO Tamilnadu

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், த.வெ.க. சார்பில் அமைச்சராக பதவியேற்ற 10 பேருக்குமான இலாகா ஒதுக்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பரிந்துரையை ஏற்று, ‘மே மாதம் 10-ஆம் தேதி பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்களுக்குரிய துறைகள் மற்றும் பொறுப்பு ஒதுக்கீடுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்’ என அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் வசம் காவல்துறை உள்ளிட்ட துறைகள் உள்ளன, நிதியமைச்சர் பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இலாகா விவரம்

முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்.

By admin