• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

முதலிடம் பிடித்தும் கடினமான சூப்பர் 8 பிரிவில் ஜிம்பாப்வே – ஒரே பிரிவில் 4 குரூப் வெற்றியாளர்கள் இருப்பது ஏன்?

Byadmin

Feb 20, 2026


டி20 உலகக் கோப்பை - சூப்பர் 8

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

2026ம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று இன்று (பிப்ரவரி 20) முடிவுக்கு வருகிறது. சனிக்கிழமை முதல் சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது. ‘ப்ரீ சீடிங்’ (Pre Seeding) மூலம் முடிவான இந்த சூப்பர் 8 சுற்றில், 4 குரூப்களிலும் முதலிடம் பெற்ற அணிகள் இடம்பெற்றிருப்பது நிறைய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சூப்பர் 8 சுற்றில் மோதும் 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

பிரிவு 1: இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் & தென்னாப்பிரிக்கா

பிரிவு 2: இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் & இலங்கை

இதில் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கும் நான்கு அணிகளுமே தங்கள் பிரிவில் முதலிடம் பெற்ற அணிகள். இந்தியா (ஏ பிரிவு), மேற்கிந்திய தீவுகள் (சி பிரிவு) மற்றும் தென்னாப்பிரிக்கா (டி பிரிவு) மூன்று அணிகளும் விளையாடிய 4 போட்டிகளையுமே வென்றிருந்தன. ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

By admin