• Thu. Feb 13th, 2025

24×7 Live News

Apdin News

முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24-ல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு | Stalin to inaugurate Chief Minister dispensaries on the 24th

Byadmin

Feb 13, 2025


தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை வரும் 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24-ம் தேதி திறக்கப்படவுள்ளதாகவும், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.



By admin