• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

முதல்வர் மருந்தகம்: மருந்துகளின் விலை எவ்வளவு குறைவு? – எப்படிப்பட்ட மருந்துகள் இங்கு கிடைக்கும்?

Byadmin

Feb 24, 2025


முதல்வர் மருந்தகம், தமிழ்நாடு, மருத்துவம்

மலிவுவிலையில் மருந்துகளை விற்கக்கூடிய ‘முதல்வர் மருந்தகம்’ எனப்படும் 1,000 மருந்துக் கடைகள் திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 24) தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளன. இந்த மருந்துக் கடைகளில் விலைகள் எப்படி இருக்கின்றன? மத்திய அரசின் ‘மக்கள் மருந்தகங்களுக்கும்’ இதற்கும் என்ன வித்தியாசம்?

‘ஜெனரிக்’ வகை மருந்துகளை குறைந்த விலையில் விற்கக்கூடிய 1,000 மருந்துக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது.

2024ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் துவங்கப்படும்” என அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

முதல்வர் மருந்தகத்தைப் பொறுத்தவரை, இந்தக் கடைகளில் காப்புரிமை இருக்கக்கூடிய மருந்துகள் கிடைக்காது. பொதுப் பெயர் மருந்துகள் எனப்படும் ஜெனரிக் மருந்துகளும், பெரிய பிராண்டுகள் தயாரித்து விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துகளும் கிடைக்கும்.

By admin