• Sat. May 23rd, 2026

24×7 Live News

Apdin News

முதல்வர் விஜய் வசம் உள்ள துறையில் திமுக பிரதிநிதிகள் ஆதிக்கம் – தொடங்கிய சிக்கல் என்ன?

Byadmin

May 23, 2026


முதல்வர் விஜய் வசம் உள்ள  துறையில் திமுக பிரதிநிதிகள் ஆதிக்கம் - தொடங்கிய சிக்கல் என்ன?

பட மூலாதாரம், CMOTamilnadu

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகள் பெரும்பாலும் திமுக வசமுள்ளன. இந்த மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள சூழ்நிலையில், பல இடங்களில் இப்போதே அரசுடனான மோதல் துவங்கியுள்ளது.

தனது அறையில் முதல்வர் விஜய் படத்தை வைக்கக்கூடாது என கோவை மேயர் ரங்கநாயகி தடுத்துள்ளார். சென்னை மேயர் பிரியா ராஜன், இதுவரை முதல்வரைச் சந்திக்கவில்லை. இத்தகைய போக்கு சென்னையில் பொதுமக்களை பாதிக்குமென்று ‘வாய்ஸ் ஆஃப் பீப்பிள்’ அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடி வீதமாக எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்துள்ளது என்பது தெரியுமென்பதால், வரும் நாட்களில் உள்ளாட்சிப் பணிகளில் அது எதிரொலிக்கும் என்கிறார் சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் லோகநாதன்.

ஆனால் அன்றாடப் பணிகளுக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது என்கின்றனர் திமுக மக்கள் பிரதிநிதிகள்.

”நான் பதவியிலிருக்கும் வரை, மேயருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முதல்வர் விஜய் படத்தை வைக்க வேண்டாமென்று கூறியிருப்பதாக” கோவை மேயர் ரங்கநாயகி பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin