• Mon. Sep 8th, 2025

24×7 Live News

Apdin News

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தால் தமிழகத்துக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு | Stalin visit to Germany and England attracts investments

Byadmin

Sep 7, 2025


சென்னை: லண்​டனில் முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில், இந்​துஜா குழு​மத்​துடன் ரூ.7,500 கோடி முதலீட்​டுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. முதல்​வரின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணம் மூல​மாக தமிழகத்​துக்கு ரூ.15,516 கோடிக்​கான முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: தமிழகத்​துக்கு முதலீடு​களை ஈர்க்​கும் வித​மாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்​வர் ஸ்டா​லின் ஐரோப்​பிய நாடு​களுக்கு சென்​றுள்​ளார். முதல் கட்​ட​மாக ஜெர்​மனிக்கு சென்ற முதல்​வர் அங்கு முதலீட்​டாளர்​கள், தொழில் நிறுவன நிர்​வாகி​களை சந்​தித்​தார். இதை தொடர்ந்​து, 26 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மூலம் ரூ.7,020 கோடிக்​கான முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டன. இதன்​மூலம் 15,320 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஜெர்​மனியை தொடர்ந்​து, தற்​போது இங்​கிலாந்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். அவரது தலை​மை​யில் ‘டிஎன் ரைசிங் ஐரோப்​பா’ முதலீட்​டாளர்​கள் சந்​திப்பு லண்​டனில் நடை​பெற்​றது. இதில், இங்​கிலாந்தை தலை​மை​யிட​மாக கொண்டு லண்​டனில் இயங்கி வரும் இந்​துஜா குழு​மம், மின்​சார வாக​னங்​களுக்​கான செல், பேட்​டரி உற்​பத்​தி,பிஇஎஸ்​எஸ் (பேட்​டரி எரிசக்தி சேமிப்பு அமைப்​பு) மற்​றும்மின்​சார சார்​ஜிங் நிலை​யங்​களுக்​கான வணி​கங்​களில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டுள்​ளது. இதன்​மூலம் மின்​சார வாகன சுற்​றுச்​சூழல் அமைப்பை விரிவுபடுத்தி 1,000-க்​கும் மேற்​பட்​டோருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும். இது, முதல்​வரின் இங்​கிலாந்து பயணத்​தின் முக்​கிய​மான முன்​னெடுப்​பாகும்.

அதேபோல, அஸ்ட்​ராஜெனகா (AstraZeneca) நிறு​வனம் 2 ஆண்​டு​களில் தமிழகத்​தில் 3-வது தொழில் முதலீட்டை அறி​வித்​துள்​ளது. சென்​னை​யில் உள்ள அதன் உலகளா​விய கண்​டு​பிடிப்பு மற்​றும் தொழில்​நுட்ப மையத்தை (GITC) ரூ.176 கோடி முதலீட்​டில் விரி​வாக்​கம் செய்​கிறது. இங்​கிலாந்​தில் முன்​ன​தாக உற்​பத்​தி, ஜவுளி தொழில்​நுட்​பம், வடிவ​மைப்பு கல்வி உள்​ளிட்ட துறை​களில் 1,293 பேருக்கு வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் வகை​யில் ரூ.820 கோடி முதலீடு​களுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

இதன்​மூலம், முதல்​வர் ஸ்டா​லினின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணத்​தால் தமிழகம் பெற்​றுள்ள மொத்த முதலீடு ரூ.15,516 கோடி. இதன் வாயி​லாக 17,613 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளதும் குறிப்​பிடத்​தக்​கது. இந்த நிகழ்​வு​களின்​போது, தமிழக தொழில், வர்த்​தகம், முதலீட்டு ஊக்​கு​விப்பு துறை அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா, முதல்​வரின் செயலர் உமா​நாத், தொழில் துறை செயலர் அருண் ராய், தமிழ்​நாடு தொழில் வழி​காட்டி நிறுவன மேலாண்மை இயக்​குநர் தாரேஸ் அகமது உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: முதலீடு​கள் தொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் தனது வலைதள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இங்​கிலாந்தை தலை​மை​யிட​மாக கொண்ட இந்​துஜா குழு​மம், தமிழகத்​தின் மின்​சார வாகன சூழலில், பேட்​டரி சேமிப்பு அமைப்​பு​களுக்​காக ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்​ளது. இது 1,000-க்​கும் மேற்​பட்​டோருக்கு வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும். அஸ்ட்​ராஜெனகா நிறு​வனத்​தின் விரி​வாக்​கம் மற்​றும் முந்​தைய புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மூலம், இங்​கிலாந்து மற்​றும் ஜெர்​மனி பயணத்​தில் ரூ.15,516 கோடி முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன. இது நமது இளைஞர்​களுக்கு 17,613 வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும். இவை வெறும் எண்​கள் அல்ல. இவை நமது வாய்ப்​பு​கள், எதிர்​காலம் மற்​றும் கனவு​கள். இது​தான் தி​ரா​விட மாடலின்​ செயல்​பாட்​டு உணர்​வு.இவ்​வாறு முதல்​வர்​ தெரிவித்​துள்​ளார்​.



By admin