பட மூலாதாரம், Getty Images
டி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டாஸின் போது, சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் நடந்தது.
உண்மையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி இரண்டு போட்டிகளில், முன்னாள் இந்திய பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, டாஸின் போது இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணி கேப்டன்களிடமும் பேசினார்.
ஆனால் இறுதிப் போட்டியின் போது ரவி சாஸ்திரி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் பேசவில்லை. இந்திய கேப்டன் சூர்யகுமார் டாஸ் வென்ற பிறகு, அவரிடம் ரவி சாஸ்திரி அணியில் இடம்பெறும் வீரர்கள் மற்றும் உத்தி குறித்து பேசினார். பாகிஸ்தான் அணி கேப்டன் அகா பேச வேண்டிய முறை வந்ததும், ரவி சாஸ்திரி அங்கிருந்து நகர்ந்தார். அதன் பிறகு அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வகார் யூனிஸ் பேசினார்.
“ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் டாஸின் போது ரவி சாஸ்திரி மற்றும் வகார் யூனிஸ் ஆகிய இருவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்களுடன் உரையாடுவார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) கோரிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, டாஸுக்கு நடுநிலையான ஒரு தொகுப்பாளரை நியமிக்குமாறு பாகிஸ்தான் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.” என்று பி.டி.ஐ செய்தி கூறுகிறது.