நடுத்தர வர்க்கத்து மக்களின் நாளாந்த வாழ்வியலையும் , அவர்களின் உளவியலையும் ஜனரஞ்சகமான பாணியில் வெளிப்படுத்தியிருக்கும் ‘மிடில் கிளாஸ்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்று ‘தேன்கூடே’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிடில் கிளாஸ்’ எனும் திரைப்படத்தில் முனீஸ்காந்த் , விஜயலக்ஷ்மி, குரேசி, காளி வெங்கட், ராதா ரவி, கோடாங்கி வடிவேலு, மாளவிகா அவினாஷ், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனி ராஜ் இசையமைத்திருக்கிறார் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தேவ் மற்றும் கே. வி. துரை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படம் மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பொன் அந்தி பூங்காற்றே.. நான் சேர்த்த தேன் கூடே.. பூந்தேனே. பூங்கூடே.. ஆகாதோ இதற்கு ஈடே..” என தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சுரேஷ் சூர்யா பாரதி எழுத, பின்னணி பாடகர் ஷான் ரோல்டன் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். எளிய மனிதர்களின் நாளாந்த வாழ்வியலில் எதிர்கொள்ளும் சிறிய சந்தோசங்களையும், நிகழ்வுகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் வரிகளும், மெல்லிசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
The post முனீஸ்காந்த் – விஜயலட்சுமி இணைந்து கலக்கும் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.