• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

முன்னாள் அமைச்சர் சந்திரசேன பிணையில் விடுவிப்பு!

Byadmin

Aug 2, 2025


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் திகதி காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin