• Sat. Dec 27th, 2025

24×7 Live News

Apdin News

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

Byadmin

Dec 27, 2025


தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,  26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

The post முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது appeared first on Vanakkam London.

By admin