3
கொழும்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திம்பிரிகஸ்யாயவில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வெள்ளவத்தை – ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி தொடர்பில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணைகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.