• Sun. Mar 9th, 2025

24×7 Live News

Apdin News

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல்

Byadmin

Mar 7, 2025


கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை (06) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin