0
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் இன்று 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் காலமானார்.
இறக்கும் போது 42 வயதாக இருந்த ரிக்கி ஹேட்டன், தனது 15 ஆண்டுகால தொழில்முறை குத்துச்சண்டை வாழ்க்கையில் பல லைட்-வெல்டர்வெயிட் மற்றும் வெல்டர்வெயிட் உலக சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.
அவர் 48 தொழில்முறை போட்டிகளில் பங்கேற்றுள்ளார், அவற்றில் 45 போட்டிகளில் வென்றுள்ளார்.
அதில் தனித்துவமானது என்னவென்றால், அவர் அந்த போட்டிகளில் 32 போட்டிகளில் நாக் அவுட் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
ரிக்கி ஹேட்டன் கடைசியாக 2012 இல் ஒரு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.