• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

முன்னாள் FBI டைரக்டர் மரணம்: சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப் பதிவு

Byadmin

Mar 22, 2026


அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. இதன் முன்னாள் தலைவராக இருந்தவர் ராபர்ட் முல்லர். அமெரிக்காவின் முதன்மை விசாரணை அமைப்பாக இருந்த எப்.பி.ஐயை இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவாக மாற்றினார்.

அதிபர் டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷியா உதவியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் முல்லர் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, அமெரிக்க எப்.பி.ஐயின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் (81), காலமானார்.

இந்நிலையில், ராபர்ட் முல்லர் மரணம் தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ராபர்ட் முல்லர் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்தார். நல்லது, அவர் இறந்துவிட்டார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பாவி மக்களை இனி அவரால் காயப்படுத்த முடியாது என பதிவிட்டுள்ளார்.

ராபர்ட் முல்லர் மரணம் தொடர்பான அதிபர் டிரம்பின் இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By admin