• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் நடந்தது என்ன?

Byadmin

Oct 3, 2026


காக்ரோச் ஜனதா கட்சி, ஞானேஷ் குமார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையை நிறுத்த வேண்டும்” எனக் கோரி வெள்ளிக் கிழமை (அக்டோபர் 2) டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மும்பையில் சிவாஜி பார்க் அருகில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (சிஜேபி) ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிபிசி மராத்தி செய்தியின்படி, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, “காந்தி இந்த நாட்டின் ஆன்மா என்றால், அம்பேத்கர் இந்த நாட்டின் முதுகெலும்பு. பாபாசாகேப் அம்பேத்கரும் நேருவும்தான் நமக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினர்” என்று கூறினார்.

மும்பையில் நடந்த இந்தப் போராட்டத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி, அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்ட பல மும்பை கலைஞர்களும் கலந்து கொண்டனர். ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியன்று மும்பையில் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.

மாணவர் அமைப்புகள், ஆம் ஆத்மி கட்சி மற்றும் சமூக அமைப்புகள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில், காக்ரோச் ஜனதா கட்சி மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் வெள்ளிக் கிழமை மாலையில் மக்களை ஒன்று கூடுமாறு கேட்டுக் கொண்டது.

மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற சிஜேபி போராட்டத்தில் திரைப்பட நடிகை ஷபானா ஆஸ்மியும் இசையமைப்பாளர் விஷால் தத்லானியும் கலந்து கொண்டனர். அங்கு திரண்டிருந்த ஏராளமான போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

By admin