• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

மும்பையில் முன்னாள் நீதிபதி சந்திரசூட் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது எப்படி?

Byadmin

Dec 31, 2025


ஒருவர் கையில் விலங்கிடப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

இன்றைய காலக்கட்டத்தில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பலரிடம் பண மோசடி நடக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

இதில் பெரும்பாலும் மூத்த குடிமக்களே குறிவைக்கப்படுகிறார்கள். தாங்கள் காவல்துறை அல்லது சிபிஐ அதிகாரிகள் என்று கூறி, அவர்களின் வாழ்நாள் சேமிப்பை மோசடி நபர்கள் கொள்ளையடிக்கின்றனர்.

மும்பையில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரைப் பயன்படுத்தி ஒரு மூதாட்டியிடம் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளனர்.

“உங்கள் வங்கிக் கணக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று அந்தப் பெண்ணை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

அதன் பின்னர், பயந்துபோயிருந்த அந்த மூதாட்டியிடமிருந்து விசாரணை என்ற பெயரில் சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயைத் தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றச் செய்துள்ளனர்.

By admin