• Thu. Dec 19th, 2024

24×7 Live News

Apdin News

மும்பை: பயணிகள் படகு மீது மோதிய கடல் படை படகு, 13 பேர் கடலில் மூழ்கி பலி – என்ன நடந்தது?

Byadmin

Dec 19, 2024


நீல்கமல் படகு விபத்து, படகு விபத்து, மும்பை செய்திகள்

பட மூலாதாரம், ANI

மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் 18ஆம் தேதியன்று, மாலை 3.55க்கு, கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலெபன்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது நீல்கமல் என்ற பயணிகள் படகு.

அப்போது எதிரே வந்த இந்திய கடற்படையின் படகு நீல்கமலில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏழு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

முதல்வர் கூறியது என்ன?

சட்டமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு, நாக்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விபத்து குறித்துப் பேசினார்.

“கப்பல் படையின் படகு ஒன்று 3.55 மணி அளவில், நீல்கமல் என்ற பயணிகள் படகில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய 101 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 13 நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.

By admin