• Wed. May 20th, 2026

24×7 Live News

Apdin News

‘மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்’: தவெக அரசின் நிலைப்பாடு என்ன?

Byadmin

May 20, 2026


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சிபிஎஸ்இ பள்ளிகளில், 6ஆம் வகுப்பு முதல் கட்டாய மூன்றாவது மொழியை (R3) அறிமுகப்படுத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், தற்போதைய கல்வியாண்டின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் மூன்று மொழிகள் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 15ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய சிபிஎஸ்இ சுற்றறிக்கையின்படி, “ஜூலை 1ஆம் தேதி முதல், ஒன்பதாம் வகுப்பிற்கு மூன்று மொழிகள் (R1, R2, R3) கற்பது கட்டாயமாக்கப்படும். அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்”.

இது மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதே எங்கள் கொள்கை” என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல்கள் முடிந்து புதிய அரசுகள் அமைந்துள்ளன, இதுவரை இந்த 3 மாநிலங்கள் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாமல் உள்ளன.

By admin