• Tue. Nov 18th, 2025

24×7 Live News

Apdin News

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார் | Murugappa Group Former Chairman Vellayan passed away

Byadmin

Nov 18, 2025


சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72.

இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்” என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

திவான் பகதூர் முரு​கப்பா செட்​டி​யார் நிறு​விய முரு​கப்பா குழு​மம் 125 ஆண்டு பாரம்​பரி​யம் கொண்​டது. முரு​கப்பா குடும்​பத்​தின் நான்​காவது தலை​முறையைச் சேர்ந்​தவர் வெள்​ளை​யன். இவருக்கு மனைவி லலிதா மற்​றும் மகன்​கள் அருண் வெள்​ளை​யன், நாராயணன் வெள்​ளை​யன் உள்​ளனர்.

முரு​கப்பா குழு​மத்​தின் பன்​முகப்​படுத்​தப்​பட்ட வணி​கங்​களை விரிவுபடுத்​தி​ய​தி​லும், அவற்​றின் செயல்​பாட்டை வலு​வான​தாக்​கிய​தி​லும் வெள்​ளை​யனின் பங்கு மிக முக்​கிய​மானது.

கோரமண்​டல் இன்​டர்​நேஷனல், ஈஐடி பாரி, கனோரியா கெமிக்​கல்ஸ் அண்ட் இண்​டஸ்ட்​ரீஸ், எக்​ஸிம் பேங்க், ஐஓபி உள்​ளிட்ட பல குழும நிறு​வனங்​களின் இயக்​குநர் குழு​வில் வெள்​ளை​யன் திறம்​பட பணி​யாற்​றியவர்​.



By admin