
சென்னை: முருகப்பா குழும முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
இதுகுறித்து முருகப்பா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் நாள்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.