• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

முருங்கைக்கீரை உசிலி

Byadmin

Apr 17, 2025


தேவையான பொருள்கள்

முருங்கைக்கீரை’ 1 கட்டு

பச்சை மிளகாய்’ 3

பெரிய வெங்காயம்’ 2

கடலைப் பருப்பு’ 250 கிராம்

எண்ணெய், உப்பு’ தேவையான அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு’ தாளிக்க

செய்முறை

கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, முருங்கைக் கீரையையும் சேர்த்துநன்றாக வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பையும் சேர்த்து வதக்கவும். கடலைப் பருப்பை சிவந்த பதத்துக்கு வந்ததும் இறக்கிவிட்டால், சுவையான உசிலி தயார்.

The post முருங்கைக்கீரை உசிலி appeared first on Vanakkam London.

By admin