• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

முறையற்ற அரசியல் செல்வாக்கு; உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவிப்பு!

Byadmin

Jan 21, 2025


முறையற்ற அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட பல காரணங்களால் உலகச் சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று, ஏனைய அனைத்துலக சுகாதார நெருக்கடிகளை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO)தவறாகக் கையாண்டதாக அவர் சாடினார்.

உலகச் சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளின் முறையற்ற அரசியல் செல்வாக்குடன் இணைந்து நிறுவனம் நடந்துகொண்டதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அது அமெரிக்காவிடம் இருந்து நியாயமற்ற, பெருமளவு நிதியைக் கோரியதாகவும், அமெரிக்கா வழங்கிய நிதி, சீனா போன்ற ஏனைய பெரிய நாடுகள் செலுத்திய நிதியுடன் ஒப்பிடும்போது சமமற்றது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளியேறுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேவேளை, சீனா தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் ஒத்துழைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

By admin