39
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த யூட் கலிஸ்ரா, சேலை ஒப்பனைத் துறையில் உலக சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஜனவரி 31ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கான போட்டியில், சேலை ஒப்பனை (Saree Pleating) பிரிவில் இவர் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில், போட்டியாளர்களுக்கு சேலை ஒப்பனை செய்ய 15 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், யூட் கலிஸ்ரா தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வெறும் 5 நிமிடங்களில் சேலை ஒப்பனையை செய்து முடித்து உலக சாதனையாளராக திகழ்ந்துள்ளார்.
அவரின் இந்தச் சாதனை, அழகு மற்றும் ஒப்பனைத் துறையில் பெண்களின் திறமையை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வரும் பெண்களின் சாதனைகளில் இது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
