• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

முல்லைத்தீவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி பிரதிக்கல்விப் பணிப்பாளர் பலி !

Byadmin

Jan 28, 2026


முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.

உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக  பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  53 வயதுடையவர் ஆவார்.

மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிப்பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை  குறித்த   குளவிகள் கொட்டியுள்ளன.

குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான  5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post முல்லைத்தீவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி பிரதிக்கல்விப் பணிப்பாளர் பலி ! appeared first on Vanakkam London.

By admin