இறுதிப் போரில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு இன்று மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்றைய 16 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது. 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.31 மணிக்கு உறவு ஒருவர் பொதுச் சுடர் ஏற்றிவைக்க – முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க – சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.
The post முள்ளிவாய்க்காலில் திரண்டது தமிழினம் (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.